TNPSC குரூப் 4 தேர்வு: 6244 காலி பணியிடங்களைக் கொண்ட தேர்வில் நீங்களும் வெற்றி பெற இதை உடனே படியுங்கள்!! TNPSC Group 4 Exam 6244 Vacancy Easy Study Tips

TNPSC Group 4 Exam 6244 Vacancy Easy Study Tips

TNPSC குரூப் 4 தேர்வு: 6244 காலி பணியிடங்களைக் கொண்ட தேர்வில் நீங்களும் வெற்றி பெற இதை உடனே படியுங்கள்!!

TNPSC Group 4 Exam 6244 Vacancy Easy Study Tips தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வனப்பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கிய குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த குரூப் 4 தேர்வு மூலம் 6244 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

TNPSC Group 4 Exam 6244 Vacancy Easy Study Tips
TNPSC Group 4 Exam 6244 Vacancies Easy Way To Success

அரசு பணிக்கு எவ்வாறு தயாராவது?

அரசுப்பணி என்றாலே எல்லோரும் தயங்குவதற்குக் காரணம் அசாத்தியப் பொறுமையும், அபார உழைப்பும், காத்திருப்பும் தேவைப்படும் என்பதுதான். ஆனால் முதல் முறை தேர்விலேயே வெற்றி பெற்றுப் பணியில் சேர்வதும் சாத்தியம்தான். நம் முன்னாலேயே இதற்கான முன்னுதாரணர்கள் ஏராளமாய் இருக்கின்றனர்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

நாம் செய்ய வேண்டியது எல்லாம்…. அடுத்த சில நாள்களுக்கு, நன்கு திட்டமிட்டு, நம்மைத் தயார் செய்துகொள்வதுதான். நன்றாக கவனத்தில் கொள்வோம் – தயார் ‘செய்வது’ அல்ல, தயார் ‘செய்து கொள்வது’. அழகு செய்வது; அழகு செய்து கொள்வது – இரண்டுக்கும் உள்ள வேறுபாடு நமக்குத் தெரியும்தானே…? அதுவேதான் இங்கும். 

ஒருவர் முதல்முறையாகப் படித்துத் தேர்வெழுதும்போது, பெரும்பாலும் தேவையான மதிப்பெண்களைப் பெறுவதைக் கடினமாக உணர்ந்திருக்கலாம். இரண்டாவது முறை எழுதும்போது மதிப்பெண்கள் கிடைத்தாலும், நூலிழையில் பலர் வேலையைத் தவறவிட்டிருக்கலாம். 3வது முறை முயற்சித்தால் அவர் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள் போட்டித் தேர்வுப் பயிற்சியாளர்கள். எனினும் ஒருவர் முறையாகத் திட்டமிட்டுப் படித்தால், முதல் முறையிலேயே உள்ளங்கையில் அரசுப் பணிக்கான உத்தரவைப் பெறலாம். 

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு, நமக்கு நாமே எப்படித் தயார் செய்து கொள்வது? முதலில், இது சாத்தியமா…? நம்புவோம். சத்தியமாக…இது சாத்தியம்தான். சரி. என்ன செய்ய வேண்டும்? எங்கிருந்து தொடங்கலாம்…? ஓர் அடிப்படைத் தேவையைப் புரிந்துகொள்ள வேண்டும். 

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு மட்டுமல்ல; அரசுப் பணிக்கான எந்தப் போட்டித் தேர்வாக இருந்தாலுமே, நாம் தொடங்க வேண்டிய இடம் – பள்ளிப் பாடப் புத்தகங்கள்தாம். பட்டம் முடித்து, அதற்கும் மேல் படித்து, வரிசையாகக் கல்வித் தகுதிகளை அடுக்கி வைத்து இருக்கலாம். ஆனாலும், நல்ல நிலையான அரசுப் பணியில் சேர வேண்டும் என்றால், பள்ளிப் பாடங்களில் ஆழ்ந்த அறிவு கட்டாயம் இருந்தாக வேண்டும். 

TNPSC Group 4 Exam 6244 Vacancy Easy Study Tips

எப்படிப் படிக்க வேண்டும்?

போட்டித் தேர்வுக்குத் தயாராகும் ஒருவர் தினந்தோறும் குறைந்தபட்சம் 8 மணி நேரம் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். அதைவிடவும் கூடுதல் நேரம் செலவிட்டால்… அதாவது முதலீடு செய்தால், அவர்களின் வெற்றி வாய்ப்பு அதிகமாகும். 

முதலில் 6-ம் வகுப்பில் இருந்து தொடங்க வேண்டும். பாடங்களை வரிகள் விடாமல், புரிந்து படிக்க வேண்டும். அடிப்படையை சரியாகப் புரிந்துகொண்டால்தான், அதன் நீட்சியாக அடுத்தடுத்த வகுப்புகளில் உள்ள மேம்படுத்தப்பட்ட பாடங்களைத் தெளிவாகப் படிக்க முடியும். அதேபோல புத்தகத்துக்குப் பின்னால் உள்ள பாடங்களையும், பயிற்சிகளையும் படிக்க வேண்டும். 

தூக்கம் வரும்போது…

தொடர்ந்து ஒருவர் படித்துக்கொண்டே இருக்கும்போது, ஒருகட்டத்தில் நிச்சயம் சலிப்பு தட்டும். உறக்கம் வரும். அப்போது நமக்குப் பிடித்த பாடத்தை எடுத்துப் படிக்க வேண்டும். செய்தித்தாள் வாசிக்கலாம். திறனறிவு (APTITUDE) கொண்ட கணக்குகளைப் போட்டுப் பார்க்கலாம். அப்போது மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும். இவற்றின் மூலம் உறக்கத்தையும் சோர்வையும் தவிர்க்கலாம். 

ஒரு பாடத்தை எடுத்துக்கொண்டால், அந்தப் பாடத்தை முழுமையாக முடித்துவிட்டு அடுத்த பகுதிக்குச் செல்லலாம் (சோர்வு ஏற்படும் நேரத்தில் மாற்றிப் படிப்பது தாண்டி). அல்லது அடிப்படையில் (6-ம் வகுப்பில்) இருந்து ஒரு பாடத்தைப் படித்தால், அதே தரத்தில் உள்ள பிற பாடங்களைப் படிக்கலாம். இதனால் தேவையற்ற குழப்பம், மறதி ஏற்படாது. 

எதைப் படிக்க வேண்டும்?

அதேபோல முதலில் எதைப் படிக்க வேண்டும் என்பதிலும் தெளிவு வேண்டும். ஒவ்வொருவரும் குறிப்பிட்ட பாடத்தில் ஆர்வமாகவும் புலமையுடனும் இருப்பர். அதேபோலப் பிடிக்காத பாடமும் இருக்கும். எந்தப் பாடத்தில் நாம் வலிமை குறைந்தவர்களாக இருக்கிறோமோ அந்தப் பாடத்தை முதலில் படித்து முடிக்க வேண்டும். 

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு, இரண்டு பாகங்களைக் கொண்டது. 

1. மொழித்தாள்.

2. பொதுப்பாடத் தாள். (General Studies) 

TNPSC குரூப் 4 தேர்வை தமிழில் எழுதலாமா?

TNPSC குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் இருக்கும். உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்துகொள்ளலாம்.

TNPSC குரூப் 4 தேர்வுகளில் வெற்றி பெற்றால் குறைந்தபட்ச ஊதியம் ரூ16,600 முதல் அதிகபட்சமாக ரூ 75,900 வரை பெறலாம். துறைகள், பதவிகள் சார்ந்து இந்த அடிப்படையில் ஊதியம் பெற முடியும். தேர்வு தொடர்பான முழு விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம்.

 

Leave a Comment