இலவச கல்வி திட்டத்தின் மூலமாக சென்னை பல்கலைக்கழகத்தில் படிக்கலாம் எப்படி விண்ணப்பிப்பது?
Chennai University Free Education Scheme Apply Full Details 2024
Chennai University Free Education Scheme Apply Full Details 2024 சென்னை பல்கலைக்கழகத்தில் இலவசமாக நாம் படிக்கலாம் எப்படி விண்ணப்பிப்பது யாரெல்லாம் திட்டத்தின் மூலமாக விண்ணப்பிக்க முடியும் என்பதை கீழ்க்கண்டவற்றில் நாம் தெளிவாக காணலாம்.
சென்னை பல்கலைக்கழகமானது ஏழை மாணவர்களும் இளநிலை படிப்புகளில் சேர்ந்து அவர்கள் கல்வித்தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். என்ற வகையில் சென்னை பல்கலைக்கழக இலவச கல்வி திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் இந்த ஆண்டு விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பான செய்தி தகவலை சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு என்னவெனில்,..
ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் சென்னை பல்கலைக்கழக கல்வி திட்டமானது கடந்த 2010 2011 கல்வி ஆண்டு முதல் இலவச கல்வி திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறதும், இந்த திட்டத்தின் கீழ் வரும் 2024-25 கல்வியாண்டிற்கான சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர பிளஸ் டூ முடித்த ஏழை மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வி திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
எனவே மாணவர்கள் 2023-24 கல்வி ஆண்டிற்கான பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூபாய் 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். அது மட்டும் இன்றி பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் ஆதரவற்ற மாணவர்கள் குடும்பத்தில் பட்டப்படிப்புக்கு வரும் முதல் தலைமுறை மாணவர்கள் மூன்றாம் பாலினத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழக இலவச கல்வி திட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
இலவச கல்வி திட்டம் மற்றும் பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ்களின் விவரங்கள் சென்னை பல்கலைக்கழக இணையதளத்தில் (www.unom.ac.in) வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் டூ தேர்வு முடிவானது வெளியான தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் சென்னை பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்து சான்றிதழ்களுடன் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். இவ்வாறு அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மாணவர்களுக்கான கல்வி சம்பந்தமான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.
Join whatsapp Click here