EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் இதை உடனே செய்யணும் வெளியான முக்கிய அறிவிப்பு!!.. EPFO Holders KYC Update Details Tamil 2024

EPFO Holders KYC Update Details Tamil 2024 PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இபிஎப்ஓ அமைப்பு ஆனது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் PF கணக்கு விவரங்களை ஆதார் மற்றும் பான் கார்டு போன்றவற்றோடு இணைக்க வேண்டும் என்பது சட்டப்படி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாக EPFO அமைப்பு அறிவித்துள்ளது.

அதைப் பற்றிய முழு தகவல் இதோ!..

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

பான் கார்டு அப்டேட், ஆதார் கார்டு அப்டேட், கேஸ் சிலிண்டர் அப்டேட் என பல முக்கியமான ஆவணங்களின் தகவல்களை இந்த வருடத்தில் அப்டேட் செய்யக்கோரி இந்திய அரசாங்கம் அறிவுறுத்தலை வழங்கி வருகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு மேலும் தற்போது பிஎப் கணக்கு விவரங்களை அப்டேட் செய்யும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டிஜிட்டல் சேவைகள் பெருகி வருகின்ற காரணத்தினால் PF கணக்கின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய வழிமுறைகளை அரசாங்கம் பின்பற்றி வருகிறது. எனவே தற்போது இந்த அப்டேட்டை அறிவித்துள்ளது.

ஏற்கனவே ஒவ்வொரு பயனாளர்களின் அடையாளத்தையும் சரியாக பதிவு செய்யும்படி அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அதில் நாம் KYC என்ற சுருக்கமாக அழைக்கப்படும்(Know Your Customers) கே ஐ சி தகவலை அப்டேட் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது சரியான கேஒய்சி செய்த பிஎஃப் பயனாளர்களுக்கு இபிஎப்ஓ நிறுவனமானது சில சிறப்பு நன்மைகளை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ரூ.500க்கு மானிய சிலிண்டர் வாங்கும் இல்லத்தரசிகளுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!

EPFO Holders KYC Update Details Tamil 2024

எனவே உங்கள் EPFO சேவைக்கான கேஒய்சி தகவலை அப்டேட் செய்வதற்கு ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வழி வகுக்கப்பட்டுள்ளது. இதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை எப்படி நாம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்பதை குறித்து நாம் முழுமையாக கீழ்க்கண்டவற்றுள் காணலாம்.

1.பான் கார்டு(PAN Card)

2.ரேஷன் அட்டை(Ration Card)

3.ஆதார் அட்டை (Aadhar Card)

4.தேர்தல் வாக்காளர் அட்டை (Voter ID)

5.பாஸ்போர்ட்(passport)

6.ஓட்டுனர் உரிமம்( Linsence)

7.வங்கி கணக்கு விவரங்கள்(Passbook Details)

8.தேசிய மக்கள் தொகை பதிவேடு(NPR Card)

EPFO Holders KYC Update Details Tamil

ஆன்லைனில் நாம் EPFO கணக்கின் KYC எவ்வாறு அப்டேட் செய்வது?

Epfo இணையதள பக்கத்திற்கு https://www.epfindia.gov.in/site_en/KYCS.php செல்ல வேண்டும்.

SErvices என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்து ஃபார் எம்ப்ளாயீஸ்(for Employees) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது உங்கள் யு ஏ என் உறுப்பினர் போர்டலில் உள்நுழையுங்கள்.

நம்பர் UAN ஆன்லைன் சர்வீஸ் என்ற விவரத்தை தேர்வு செய்யுங்கள். உங்கள் UAN விபரம் மற்றும் பாஸ்வேர்டு உள்ளிட்டு லாகின் செய்து கொள்ளுங்கள்.

Manage என்ற விருப்பத்தை கிளிக் செய்து KYC என்பதை தேர்வு செய்யுங்கள்.

பின்னர் முக்கிய ஆவணங்களை குறிக்கும் விருப்பங்கள் காண்பிக்கப்படும் உங்களிடம் இருக்கும் ஆவணங்களின் தகவல்களை சரியாக உள்ளடங்கள்.

இப்போது Save கிளிக் செய்யுங்கள். இந்த முறையை நீங்கள் பின்பற்றினால் உங்கள் கேஒய்சி தகவல்கள் அப்டேட் செய்யப்படும்.

மேலும் இத்தகவல் பயனுள்ளதாக இருந்தால் மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

Join whatsapp Click here

Leave a Comment