EPFO Holders Have Happy News Released EPFO என்ற ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது சிகிச்சைக்காக பணம் எடுக்கும் வரம்பை ரூபாய் ஒரு லட்சமாக உயர்த்தி இருக்கிறது. அது குறித்து விரிவான தகவல் கீழ்கண்ட பதிவில் காணலாம்.

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானதும் ஒரு நற்செய்தியை தற்போது பயனர்களுக்கு வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் பயனர்கள் தங்களுடைய கணக்கில் இருக்கும் பணத்தை மருத்துவ சிகிச்சைக்காக ரூபாய் ஒரு லட்சம் வரை எடுக்கலாம் என அறிவித்துள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
EPFO Holders Have Happy News Released
இதற்கு முன்னதாக இருந்த வரம்பு ரூபாய் 50,000 ஆக இருந்தது. தற்போது அது இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே EPFO பயனாளர்களுக்கு இது மகிழ்ச்சியான தகவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இதுகுறித்து இபிஎப்ஓ படிவம் 31 இன் 68J கீழ் ஒரு சுற்றறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் பக்கவாதம், காச நோய், புற்றுநோய், இதய நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சை பெற இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த புதிய வசதி மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் ஒப்புதலுக்கு பின்னர் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயனாளர்களுக்கு இது மகிழ்ச்சியான தகவலாக அமையும் என நம்பப்படுகிறது.
Join whatsapp Click here