இலவச கேஸ் சிலிண்டர் திட்டம் மத்திய அரசு வழங்கும் இந்த திட்டத்தை பற்றி தெரியுமா?..
PM Free Gas Scheme Full Details In Tamil
PM Free Gas Scheme Full Details In Tamil மத்திய அரசாங்கம் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள பெண்களுக்கு உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலமாக இலவசமாக கேஸ் வழங்கி வருகிறது இந்த திட்டம் பிபிஎல் ரேஷன் அட்டை இருந்தால் கேஸ் ஸ்டவ் மற்றும் கேஸ் சிலிண்டர் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் பெண்கள் மட்டுமே பயன்பெற முடியும்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
இலவச சமையல் எரிவாயு சிறப்பம்சம்
- வறுமை கோட்டிற்கு கீழே வாழும் பெண்களுக்கு மத்திய அரசு உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலமாக கேஸ் சிலிண்டரை வழங்கி வருகிறது இந்த திட்டமானது கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு இன்றுவரை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- மேலும் இத்திட்டம் வறுமை கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்களுக்கு5 கோடி சமையல் எரிவாயும் சிலிண்டர் இணைப்புகளை வழங்குவதற்காகவே இந்த திட்டமானது கொண்டுவரப்பட்டது.
- இந்த திட்டத்தின் வாயிலாக வறுமை கோட்டிற்கு கீழே உள்ள பெண்கள் இலவச சமையல் எரிவாயு மேலும் ஒரு கேஸ் அடுப்பையும் பெற்றுக் கொள்ளலாம் .அது மட்டும் இன்றி ஒவ்வொரு புதிய பயனாளிகளுக்கும் ரூபாய் 1600 நிதி உதவியும் வழங்கப்படுகிறது.
- இதன் அடிப்படையில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களை சேர்ந்த பெண்களால் மட்டுமே இந்த திட்டத்தின் மூலமாக இலவச சிலிண்டர் எனை பெற முடியும். இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்ணின் வயதானது 18-க்கும் குறையாமல் இருக்க வேண்டும்.
- அதுமட்டுமின்றி இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பெண்ணுக்கு இதற்கு முன்பாக எந்த எரிவாய் இணைப்பும் இல்லாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்
மேலும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க வறுமை கோட்டிற்கு கீழே உள்ள சான்றிதழ், ஆதார் அட்டை ,ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஜாதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முகவரி ஆவணம், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் விண்ணப்பதாரரின் ஒப்புதல் போன்றவை கட்டாயமாக வழங்க வேண்டும்.
எங்கு விண்ணப்பிப்பது
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று உஜ்வாலா 2.0 திட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் உரிய ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும் .மேலும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்.