தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு!! Tamil Nadu School Reopen Date 2024

Tamil Nadu School Reopen Date 2024 தமிழகத்தில் கோடை விடுமுறை எனது பல்வேறு வகுப்புகளுக்கு தொடங்கிவிட்ட நிலையில் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

School Reopen Date 2024

அதற்கு தமிழக அரசானது இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாத நிலையில் சில தனியார் பள்ளிகள் அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அச்செய்தியை குறித்து இப்பதிவில் காணலாம்.

Tamilnadu School Reopen Date

தமிழகத்தில் தற்போது 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வானது முடிவடைந்துள்ளது. அதற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணியானது தொடங்கி நடைபெற்று வருகின்றன. மேலும் நான்காம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களுக்கான ரமலான் பண்டிகை மற்றும் தேர்தல் நடைபெறும் காரணத்தை ஒட்டி தற்போது ஒன்பது நாட்கள் ஆனது தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

தனியார் பள்ளிகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது

இவர்களுக்கு மேலும் இரண்டு பாடங்களுக்கான பொதுத் தேர்வானது ஏப்ரல் 23,24ம் தேதிகளில் நடைபெற உள்ளது எனவே அதன் பிறகு கோடை விடுமுறையானது அவர்களுக்கு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் தற்போது கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் மாணவர்கள் மத்தியில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சில தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் எல்கேஜி ,யுகேஜி படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 17ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

தமிழகத்தில் அரசு பள்ளிகள் திறப்பு அறிவிப்புகள் ஆனது தேர்தல் முடிந்த பிறகு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அதற்கு பிறகு தான் பள்ளிகள் திறப்பானது இருக்கும் எனவும் மேலும் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.




Leave a Comment