வெறும் 49,999 ரூபாய்க்கு மிகக் குறைந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வந்தாச்சு!!மக்களே வாங்க முந்துங்கள்!..Baas Offers Low Price Electric Scooter Only 49999 Happy
Baas Offers Low Price Electric Scooter Only 49999 இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உபயோகி பொருள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது இந்த மின்சார வாகனத்தை எளிதில் நம்மால் இயக்க முடியும் அது மட்டும் இன்றை இந்த வாகனத்தை இயக்க லைசன்ஸ் ஏதும் தேவையில்லை என்ற காரணத்தினால் மக்கள் இதனை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். எனவே தற்போது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த மின்சார ஸ்கூட்டரை பற்றிய முழு தகவலை நாம் கீழ்கண்டவற்றில் காணலாம்.
லெக்ட்ரிக்ஸ் ஈவி நிறுவனமானது தற்போது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது இதுவரை இந்திய சந்தையிலே மலிவான மற்றும் மிகவும் அதிவேகமாக இயங்கும் மின்சார ஸ்கூட்டராக இருக்கிறது.
லெக்ட்ரிக்ஸ் ஈவி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சிறப்பம்சம்
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இன் பேட்டரி-ஆஸ்-எ-சர்வீஸ் (BaaS) திட்டத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் உறுப்பினர் அடிப்படையில் பேட்டரி சேவைகளுக்கு பணம் செலுத்துவதன் மூலமாக வரம்பற்ற பேட்டரி உத்திரவாதத்தை அனுபவிக்கலாம். இந்த புதிய மின்சார ஸ்கூட்டரின் அறிமுகத்தின் போது தலைவர் பிரதேஷ் தல்வார் அவர்கள் இந்த புதிய வாஸ் திட்டத்தின் கீழ் உள்ள வாடிக்கையாளர்கள் அதிக நன்மைகளை பெறுவார்கள் என அவர் கூறி இருந்தார்.
மேலும் ICE வாகனத்தை வாங்க வாடிக்கையாளர்கள் ரூபாய் ஒரு லட்சம் செலுத்த வேண்டும் என்பதற்கு பதிலாக தற்போது EV அனுபவத்தை மிகவும் மலிவு விலையில் தந்து இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.
மேலும் இந்த நிறுவனம் பேட்டரி-ஆஸ்-எ-சர்வீஸ் (BaaS) திட்டத்துடன் வாடிக்கையாளர்களுக்கு வெறும் ரூபாய் 49,999 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தவிர தற்போது பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் இந்த வாகனமானது குறைந்த முதலீட்டில் நாம் பயன் பெற்றுக் கொள்ளலாம் .பெட்ரோல் வாகனங்களின் பராமரிப்பு செலவு ஒப்பிடும்போது எங்களது உறுப்பினர் திட்டமிடல் ஆனது மிகவும் சிக்கனமாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
மின்சார ஸ்கூட்டரை நாம் வாங்கினால் அந்த வாடிக்கையாளர்களுக்கு ஒரு சேவையாக பேட்டரி வசதியையும் அந்த நிறுவனம் வழங்கி வருகிறது. இதற்காக EVஉரிமையாளர்கள் பேட்டரிக்கு மாதம் 1499 ரூபாய் தனி சந்தா எடுக்க வேண்டும். இந்தியாவில் பேட்டரிகளை பிரித்து எடுத்து வாடிக்கையாளர்களுக்கு சேவையாக வழங்கும் முதல் நிறுவனமும் இந்த நிறுவனமே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சம் என்னவென்றால் ஒரு முறை நாம் முழுமையாக ரீச்சார்ஜ் செய்து விட்டால் 100 கிலோ மீட்டர்கள் வரை அந்த பேட்டரி நீடிக்கும் என்று இந்த நிறுவனம் கூறுகிறது. ஆனால் ஆய்வுக்குப் பிறகு உண்மை நிலை தெரிய வரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .அதிகபட்ச வேகமாக மணிக்கு 50 கிலோமீட்டர்களை எளிதில் கடந்து விடலாம் என அந்த நிறுவனம் கூறுகிறது. ரூபாய் 50,000 பட்ஜெட்டில் நாம் இந்த அதிவேக மின்சார ஸ்கூட்டரை வாங்குவது எளிய மக்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
சுமார் ரூ. 50,000 பட்ஜெட்டில் வாங்க திட்டமிட்டால், இது உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். முன்னதாக, நிறுவனம் LXS 2.0 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பிப்ரவரி 2024 இல் அறிமுகப்படுத்தியது, இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 98 கிலோமீட்டர் வரை செல்லும். இந்த பழைய எலக்ட்ரிக் ஸ்கூட்டரில், வாடிக்கையாளர்கள் 2.3 kWh பேட்டரி பேக்கைப் பெறுகிறார்கள் மற்றும் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.79,999. நிறுவனத்தின் படி, புதிய LXS 2.0 வரம்பு, மதிப்பு மற்றும் தரம் ஆகிய மூன்று முக்கியமான வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்கிறது.